kamatchi Ammanukku song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kamatchi Ammanukku song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2026

Kamatchi Ammanukku Amman devotional song lyrics in Tamil | காமாட்சி அம்மனுக்கு அம்மன் பக்தி பாடல் வரிகள் | Kannattha Movie

 

காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்





கன்னியாகுமரி என்ன காந்திமதி கோயில் என்ன

மாமதுரை கோயில் என்ன மலைமகளின் வாசம் என்ன

பேரு பல தாங்கி நிப்பா தாய் ஒருத்தி தான்

ஏழைகளை காத்து நிப்பா தாய் ஒருத்தி தான்


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்

கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்


வெள்ளி முளைக்கிற வானம்

விடிவது யாராலே அம்மன் அவ பேராலே

ஆஹா பொன்னு விளையுற பூமி

பூப்பது யாராலே அம்மன் தந்த சீராலே


ஏழை மனம் பாடி வரும் அம்மா பேரு

ஏக்கம் எல்லாம் தீர்த்து

வைக்கும் அம்மா பேரு

கல்லும் முள்ளும் பூவும்

உன் கண்ணசைவில் வானும்

பஞ்சம் பசி தீரும் உன் பார்வ ஒண்ணு போதும்

அம்மன் இருக்கா அள்ளி

கொடுப்பா ..கொடுப்பா..


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கையில் ஒரு திரி சூலம்

தீமைகளை தீர்த்து வைக்கும்

தீயவரை காத்து வைக்கும்


ஆஹா அண்டங்களுக் கிது மூலம்

அத்தனையும் ஆட்டி வைக்கும்

ஆணவத்தை ஓட்டி வைக்கும்


ஆடியிலே அம்மனுக்கு பொங்கச் சோறு

ஆடி வரும் அழகு கொஞ்சும் பூந்தேரு

கோயில் மணி ஓசை அத கேக்க கேக்க ஆச

அம்மன் வந்து பேச இங்கு

நித்தம் நித்தம் பூச

அம்மன் இருக்கா அள்ளி

கொடுப்பா ..கொடுப்பா..


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கன்னியாகுமரி என்ன காந்திமதி கோயில் என்ன

மாமதுரை கோயில் என்ன மலைமகளின் வாசம் என்ன

பேரு பல தாங்கி நிப்பா தாய் ஒருத்தி தான்

ஏழைகளை காத்து நிப்பா தாய் ஒருத்தி தான்

காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்

கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Om Shivoham Sivan devotional song lyrics in Tamil