lyrics video லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lyrics video லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 அக்டோபர், 2026

Thirugnanasambandar Aruliya Vaasi Theeravae Kaasu Nalguvir Pathigam lyrics in Tamil

 

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசு இல் மிழலையீர், ஏசல் இல்லையே.





இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர்

கறை கொள் காசினை முறைமை நல்குமே



செய்யமேனியீர், மெய் கொள் மிழலையீர்

பை கொள் அரவினீர், உய்ய நல்குமே



நீறு பூசினீர், ஏறுஅது ஏறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே



காமன் வேவ ஓர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே



பிணி கொள் சடையினீர், மணி கொள் மிடறினீர்

அணி கொள் மிழலையீர், பணிகொண்டு அருளுமே



மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே



அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்

பரக்கும் மிழலையீர், கரக்கை தவிர்மினே



அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே



பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார் 

வெறி கொள் மிழலையீர், பிறிவுஅது அரியதே




காழி மா நகர், வாழி சம்பந்தன்

வீழிமிழலைமேல், தாழும் மொழிகளே


Sarabeswarar Gayatri Mantra Benefits in Tamil

Ayarpadi Maligaiyil song lyrics in Tamil

Parthene Uyirin Vazhiyae song lyrics in Tamil



Thirugnanasambandar Aruliya Vaasi Theeravae Kaasu Nalguvir Pathigam lyrics in Tamil

  வாசி தீரவே, காசு நல்குவீர் மாசு இல் மிழலையீர், ஏசல் இல்லையே. இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர் கறை கொள் காசினை முறைமை நல்குமே செய்யமேனியீ...