Karakaattaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Karakaattaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2026

Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil | மாரியம்மா மாரியம்மா அம்மன் பக்தி பாடல் வரிகள் | Karakattakaran Movie

 

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா



மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங் கரகம்


நிலையாக நிலைக்க வைக்கும்

நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்


உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா


காவல் நீதான் காளியம்மா


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா

காத்தும் கனலும் நீயம்மா


வானத்தபோல் நின்னு பாரம்மா

வந்தேன் தேடி நானம்மா


இந்த மனம் முழுதும் நீதானே

வந்த வழி துணையும் நீதானே


தங்க திருவடிய தொழுதோமே

இங்கு மனம் உருக அழுதோமே


சீரேஸ்வரி காமேஸ்வரி

வேறாரு நீதானே காப்பு


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்

வாழ்வே வளமே பாக்கட்டும்


நீ எங்க தாய் என்று காணட்டும்

நிழலும் நிஜமா மாறட்டும்


சக்தி முழுதும் தந்து காப்பாயே

முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே


பக்தி மனம் விரும்பும் என் தாயே

நித்தம் பரிதவிக்கும் உன் சேயே


சாட்சி சொல்லும் தாயே துணை

தீயெல்லாம் பூவாக மாறட்டும்


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங் கரகம்


நிலையாக நிலைக்க வைக்கும்

நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்


உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா


காவல் நீதான் காளியம்மா


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil