bhakthi songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bhakthi songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜூலை, 2025

‎கந்த சஷ்டி கவசம் | Kandha Sasti Kavasam Lyrics in tamil

 

காப்பு


‎துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்

‎பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

‎நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்

‎சஷ்டி கவசம் தனை.


‎அமர ரிடர்தீர அமரம் புரிந்த

‎குமரனடி நெஞ்சே குறி.


முருகனின் கந்த சஷ்டி கவசம் தமிழ் பாடல் மற்றும் பக்தி படம்











நூல்


‎சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

‎சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

‎பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

‎கீதம் பாடக் கிண்கிணி யாட


‎மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

‎கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

‎வரவர வேலா யுதனார் வருக

‎வருக வருக மயிலோன் வருக


‎இந்திரன் முதலா எண்டிசை போற்றி

‎மந்திர வடிவேல் வருக வருக!

‎வாசவன் மருகா வருக வருக

‎நேசக் குறமகள் நினைவோன் வருக


‎ஆறுமுகம் படைத்த ஐயா வருக

‎நீறிடும் வேலவன் நித்தம் வருக

‎சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

‎சரவண பவனார் சடுதியில் வருக


‎ரஹண பவச ர ர ர ர ர ர ர

‎ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

‎விநபவ சரஹண வீரா நமோநம

‎நிபவ சரஹண நிறநிற நிறென


‎வசர வணப வருக வருக

‎அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

‎என்னை ஆளும் இளையோன் கையில்

‎பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்


‎பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

‎விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

‎ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

‎உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்


‎கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

‎நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

‎சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

‎குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!




ஆறு முகமும் அணிமுடி ஆறும்

‎நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

‎பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

‎நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்


‎ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

‎ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

‎பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

‎நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


‎முப்புரி நூலும் முத்தணி மார்பும்

‎செப்பழ குடைய திருவயி றுந்தியும்

‎துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

‎நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்


‎இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

‎திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

‎செககண செககண செககண செகண

‎மொகமொக மொகமொக மொகமொக மொகென


‎நகநக நகநக நகநக நகென

‎டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

‎ரரரர ரரரர ரரரர ரரர

‎ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி


‎டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

‎டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

‎விந்து விந்து மயிலோன் விந்து

‎முந்து முந்து முருகவேள் முந்து


‎என்றனை யாளும் ஏரகச் செல்வ

‎மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

‎லாலா லாலா லாலா வேசமும்

‎லீலா லீலா லீலா வினோ தனென்று


‎உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

‎எந்தலை வைத்துன் இணையடி காக்க

‎என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

‎பன்னிரு விழியால் பாலனைக் காக்க


‎அடியேன் வதனம் அழகுவேல் காக்க

‎பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

‎கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

‎விழி செவி இரண்டும் வேலவர் காக்க


‎நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

‎பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

‎முப்பத் திருபல் முனைவேல் காக்க

‎செப்பிய நாவைச் செவ்வேல் காக்க


‎கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

‎என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

‎மார்பை ரத்ன வடிவேல் காக்க

‎சேரிள முலைமார் திருவேல் காக்க


‎வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

‎பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

‎அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

‎பழுபதி னாறும் பருவேல் காக்க


‎வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

‎சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

‎நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

‎ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க


‎பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

‎வட்டக் குதத்தை வடிவேல் காக்க

‎பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கந்த சஷ்டி கவசம் தமிழில் – முருகன் அருள் பெறும் பாடல் படம்










கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

‎ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

‎கைகளி ரண்டும் கருணைவேல் காக்க


‎முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

‎பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

‎நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

‎நாபிக் கமலம் நல்வேல் காக்க

‎முப்பால் நாடியை முனைவேல் காக்க


‎எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

‎அடியேன் வசனம் அசைவுள நேரம்

‎கடுகவே வந்து கனகவேல் காக்க

‎வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

‎அரையிருள் தன்னில் அனையவேல் காக்க


‎ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

‎தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

‎காக்க காக்க கனகவேல் காக்க

‎நோக்க நோக்க நொடியில் நோக்க

‎தாக்க தாக்க தடையறக் தாக்க


‎பார்க்க பார்க்க பாவம் பொடிபட

‎பில்லி சூனியம் பெரும்பகை அகல

‎வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

‎அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

‎பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்


‎கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

‎பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

‎அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

‎இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

‎எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்


‎கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

‎விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

‎தண்டியக் காரரும் சண்டாளர் களும்

‎என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட


‎ஆனை யடியினில் அரும்பா வைகளும்

‎பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

‎நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

‎பாவைக ளுடனே பலகல சத்துடன்


‎மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

‎ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

‎காசும் பணமும் காவுடன் சோறும்

‎ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்


‎அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

‎மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

‎காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

‎அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட


‎வாய்விட் டலறி மதிகெட் டோட

‎படியினில் முட்ட பாசக் கயிற்றால்

‎கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

‎கட்டி உருட்டு கைகால் முறிய


‎கட்டு கட்டு கதறிடக் கட்டு

‎முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

‎செக்கு செக்கு செதில் செதிலாக

‎சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு


‎குத்து குத்து கூர்வடி வேலால்

‎பற்று பற்று பகலவன் தணலெரி

‎தணலெரி தணலெரி தணலது வாக

‎விடு விடு வேலை வெகுண்டது வோடப்


‎புலியும் நரியும் புன்னரி நாயும்

‎எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

‎தேளும் பாம்பும் செய்யான் பூரான்

‎கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்


‎ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

‎ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

‎வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

‎சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு


‎குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

‎பக்கப் பிளவை படர்தொடை வாழை

‎கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

‎பற்குத் தரணை பருஅரை யாப்பும்


‎எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

‎நில்லா தோட நீஎனக் கருள்வாய்

‎ஈரேழு உலகமும் எனக் குறவாக

‎ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா


‎மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

‎உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

‎சரவண பவனே சைலொளி பவனே

‎திரிபுர பவனே திகழொளி பவனே


‎பரிபுர பவனே பவமொளி பவனே

‎அரிதிரு மருகா அமரா வதியைக்

‎காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

‎கந்தா குகனே கதிர்வே லவனே


‎கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

‎இடும்பனை யழித்த இனியவேல் முருகா

‎தனிகா சலனே சங்கரன் புதல்வா

‎கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


‎பழநிப் பதிவாழ் பாலகு மாரா

‎ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

‎செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

‎சமரா புரிவாழ் சண்முகத் தரசே


‎காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

‎என்நா இருக்க யானுனைப் பாட

‎எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

‎பாடினேன் ஆடினேன் பரவச மாக


‎ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை

‎நேச முடன்யான் நெற்றியில் அணிய

‎பாச வினைகள் பற்றது நீங்கி

‎உன்பதம் பெறவே உன்னரு ளாக


‎அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

‎மெத்தமெத் தாக வேலா யுதனார்

‎சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

‎வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க


‎வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

‎வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

‎வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

‎வாழ்க வாழ்க வாரணத் துவசம்


‎வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க

‎எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

‎எத்தனை அடியேன் எத்தனை செயினும்

‎பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்


‎பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

‎பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து

‎மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

‎தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்


‎கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

‎பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

‎காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

‎ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி


‎நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

‎கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

‎சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

‎ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

‎ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய


‎அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

‎திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்

‎மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்


‎நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

‎நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

‎எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்

‎கந்தர்கை வேலாம் கவசத் தடியை


‎வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

‎விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

‎பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

‎நல்லோர் நினைவில் நடனம் புரியும்





‎சர்வ சத்ரு சங்கா ரத்தடி

‎அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

‎வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

‎சூரபத் மாவைத் துணித்தகை யதனால்

‎இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த


‎குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

‎சின்னக் குழந்தை சேவடி போற்றி!

‎எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்


‎மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

‎தேவர்கள் சேனா பதியே போற்றி!

‎குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

‎திறமிகு திவ்விய தேகா போற்றி!


‎இடும்பா யுதனே இடும்பா போற்றி!

‎கடம்பா போற்றி கந்தா போற்றி!

‎வெட்சி புனையும் வேலே போற்றி!

‎உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!


‎மயில்நட மிடுவோர் மலரடி சரணம்!

‎சரணம் சரணம் சரவண பவஓம்

‎சரணம் சரணம் சண்முகா சரணம்!

‎சரணம் சரணம் சண்முகா சரணம்!

ஷஷ்டி விரதத்தின் மகிமை மற்றும் அதன் பலன்கள்

ஷஷ்டி விரதம் (Shashti Viratham) என்பது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். குறிப்பாக சுப்பிரமண்ய சு...