Murugan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Murugan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2026

Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil | மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள்

 

பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே….

கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….





எதில் நீ இருந்தாய்….

எங்கோ மறைந்தாய்….

உன்னைத் தேடி அலைந்தேன்….

எனக்குள்ளேத் தெரிந்தாய்….


இது போதும் எனக்கு….

வேறு வரங்கள் நூறு வேண்டுமா….

இறைவா இது தான் நிறைவா….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….



பார்த்தேனே உயிரின் வழியே….

யார் கண்ணும் காணா முகமே….

ஓ…. ஓ…. கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…


வேதங்கள் மொத்தம் ஓதி….

யாகங்கள் நித்தம் செய்து….

பூஜிக்கும் பக்தி அதிலும்….

உன்னைக் காணலாம்….


பசி என்று தன் முன் வந்து….

கை ஏந்தி கேட்கும் போது….

தன் உணவைத் தந்தால் கூட….

உன்னைக் காணலாம்….


உன்னைக் காண பல கோடி….

இங்கு வாரி இறைக்கிறார்கள்….

எளிதாக உன்னை சேர….

இங்கு யார் நினைக்கிறார்கள்….


அலங்காரம் அதில் நீ இல்லை….

அகங்காரம் மனதில் இல்லை….

துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத….

அன்பில் இருக்கிறாய்….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….


அகம் நீ ஜகம் நீ….

அணுவான உலகின் அகலம் நீ….

எறும்பின் இதய ஒளி நீ….

களிரின் துதிக்கைக் கணமும் நீ….


ஆயிரம் கை உண்டு என்றால்

நீ ஒரு கை தர கூடாதா

ஈராயிரம் கண் கொண்டாய்

உன் ஒரு கண் என்னை பாராதா

உன்னில் சரண் அடைந்தேன்

இனி நீ கதியே


பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே


Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil


ஞாயிறு, 19 ஜூலை, 2026

Malai nindra thirukkumara murugan song lyrics | மலை நின்ற திருக்குமரா முருகன் பாடல் வரிகள்

 

Malai nindra thirukkumara maal marugaa

Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa




Alai paayum manam yaavum unnidam naadum….aa..

Alai paayum manam yaavum unnidam naadum….

Nilaiyaana paerinba arul vandhu koodum

Nilaiyaana paerinba arul vandhu koodum


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Thalaivaa un pugazh paadum arupadai veedu

Aa…aa…aa…aa…aa..aa..aa…aa…aa…aa…aa

Thalaivaa un pugazh paadum arupadai veedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Pitha Pirai Soodi Sivan song lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

வியாழன், 11 ஜூன், 2026

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil | வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ பாடல் வரிகள் தமிழில்

 


விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள்

மெய்மை குன்றா மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்




வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ

கந்தன் உன்னை காண தினம் ஓடி வருவேனோ

செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ

எண்ணி எண்ணி பாடும் என்னை

கந்தன் அறிவானோ


தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து


தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ

மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ

பொங்கும் கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ

வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ


தனக்கொரு தனித்துவ படையென நிலமென

வான்மயில் ஏறியவன் முருகன்

பாதங்கள் சொன்ன மகன்


யாரும் எனக்கில்லை என நாதியற்று நான் கலங்க

ஆறுதல் தந்த மகன் முருகன்

ஆறுதோள் வென்ற மகன்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா


பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்

பிரணவப் பொருள் மறந்ததில் வேல் சினந்தன்று கொடுத்த சிறையும் 

வள்ளி தெய்வானையுடன் காட்சி அருளும்

தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Odi Odi Odi Utkalantha Sivan Song in Tamil

Vishnu Sahasranamam in Tamil

புதன், 27 மே, 2026

Pazham Neeyappa Murugan Song Lyrics in Tamil | பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா முருகன் பாடல் வரிகள் தமிழில்

 




Pazham Neeyappa Murugan Song


ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ

ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்

உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்

உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று

நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...



முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று

நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா

உனக்குச் சாருமொரு பிழையில்லையே

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று

நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே



சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா

சக்தி வடிவேல் வடிவேல் வேல்...

சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?

வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?

முருகா உனக்குக் குறையுமுளதோ?

வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா

உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?



ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?

முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்

என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்

தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட

சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி

தண்டபாணித் தெய்வமே



பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா



கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு

கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்

கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்

உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா



ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு

தாயுண்டு மனம் உண்டு

தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்

தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு



ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ


Muneeswaran Gayatri Mantra

Sivan 108 Potri in Tamil

Ayyanaar Mantra



செவ்வாய், 26 மே, 2026

Thiruvannamalai Kirivalam Paathaiyil Ulla Murugan Kovilyin Sthala Padal

 


Murugan Sthala Padal


 

Kandhar Anupoothi

Subramania Pujangam

Shanmugan Kavasam


 

Thirumurugan Ashstoththiram | திருமுருகன் அஷ்டோத்திரம் முருகன் மந்திரம்

 


Thirumurugan Ashstoththiram



Kandhar Anupoothi

Subramania Pujangam

Shanmugan Kavasam

Chant Muruga 1008 Times | 1008 முறை முருகன் ஜபம்

 


Chant Muruga 1008 times



Kandhar Anupoothi

Thiruchendur Pathigam

Thiruppavai Pasuram - 30

Murugan Powerful Mantra in Tamil | முருகனின் சக்தி வாய்ந்த மந்திரம் தமிழில்

 


Murugan devotional Mantra



Subramania Pujangam

Valli Gayatri Mantra

Shanmugan Kavasam

Thiruchendur Pathigam | திருச்செந்தூர் பதிகம்

 


Thiruchendur Pathigam



Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 30

Thiruppavai Pasuram - 29

Kandhar Anupoothi | கந்தர் அனுபூதி

 


Kandhar Anupoothi



Subramania Pujangam

Shanmugan Kavasam

Valli Gayatri Mantra

Subramania Karavalambashtakam | சுப்ரமண்ய கராவலம்பஷ்டகம்

 

ஹே ஸ்வாமினாத கருணாகர தீனபம்தோ

ஸ்ரீபார்வதீஸமுகபம்கஜ பத்மபம்தோ

ஸ்ரீஸாதிதேவகணபூஜிதபாதபத்ம

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (1)



Subramania Karavalambashtakam


தேவாதிதேவனுத தேவகணாதினாத

தேவேம்த்ரவம்த்ய ம்றுதுபம்கஜமம்ஜூபாத

தேவர்ஷினாரதமுனீம்த்ரஸூகீதகீர்தே

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் 

(2)


னித்யான்னதான னிரதாகில ரோகஹாரின்

தஸ்மாத்ப்ரதான பரிபூரிதபக்தகாம

ஸ்றுத்யாகமப்ரணவவாச் யனிஜஸ்வரூப

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (3)


க்ரெளம்சாஸூரேம்த்ர பரிகம்டன ஸக்திஸூல

பாஸாதிஸஸ்த்ரபரிமம்டிததிவ்யபாணே

ஸ்ரீகும்டலீஸ த்றுததும்ட ஸிகீம்த்ரவாஹ

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (4)


தேவாதிதேவ ரதமம்டல மத்ய வேத்ய

தேவேம்த்ர பீடனகரம் த்றுடசாபஹஸ்தம்

ஸூரம் னிஹத்ய ஸூரகோடிபிரீட்யமான

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (5)


ஹாராதிரத்னமணியுக்த கிரீடஹார

கேயூரகும்டலலஸத்கவசாபிராம

ஹே வீர தாரக ஜயாமரப்றும்தவம்த்ய

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (6)


பம்சாக்ஷராதிமனுமன்த்ரித காங்கதோயைஃ

பம்சாம்றுதைஃ ப்ரமுதிதேம்த்ரமுகைர்முனீம்த்ரைஃ

பட்டாபிஷிக்த ஹரியுக்த பராஸனாத

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம்

(7)


ஸ்ரீகார்திகேய கருணாம்றுதபூர்ணத்றுஷ்ட்யா

காமாதிரோககலுஷீக்றுததுஷ்டசித்தம்

பக்த்வா து மாமவகளாதர காம்திகான்த்யா

வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் 

(8)


ஸூப்ரஹ்மண்ய கராவலம்பம் புண்யம் யே படன்தி த்விஜோத்தமாஃ

தே ஸர்வே முக்தி மாயான்தி ஸூப்ரஹ்மண்ய ப்ரஸாததஃ

ஸூப்ரஹ்மண்ய கராவலம்பமிதம் ப்ராதருத்தாய யஃ படேத்

கோடிஜன்மக்றுதாம் பாபம் தத்க்ஷணாதேவ னஸ்யதி


Shanmugan Kavasam

Valli Gayatri Mantra

Thiruppavai Pasuram - 26

Subramania Pujangam | சுப்ரமண்ய புஜங்கம்

 

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)



Subramania Pujangam


ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்(2)


மயூராதிரூபம் மஹாவாக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்

மஹீதேவதேவம் மஹாவேத பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்

(3)


யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)


யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா

ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்(5)


கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா

ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து(6)


மஹாம்போதி தீரே மஹாபாபசோரே

முனீந்த்ரானுகூலே ஸூகந்தாக்யசைலே

குஹாயாம் வஸந்தம் வ்யபாஸா லஸந்தம்

ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் (7)


லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே

ஸூமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே

ஸமுத்யஸ் ஸஹஸ்ரரார்க துல்ய ப்ரகாசம்

ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம்

(8)


ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே

மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே

மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே(9)


ஸூவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்

க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்

லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்

கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)


புளிந்தேச கன்யாக நாபோக துங்க

ஸ்தனாலிங்க நாஸக்த காச்சீரராகம்

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)


விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்

நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்

ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹூதண்டான் (12)


ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு

ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்

ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா

ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)


ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்

கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி

ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ

தவாலோகேயே ஷண்முகாம் போரு ஹாணி (14)


விசாலேஷூ கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷூ த்வாதசஸ் வீக்ஷணேஷூ

மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்

பவேத்தே தயாசீல கா நாமஹானி(15)


ஸூதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா

ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்

ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய

கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)


ஸ்புத்ரத் ன கேயூரஹாராபிராம

ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக

கடெள பீதவாஸா கரே சாருசக்தி

புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ (17)


இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா

ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்

ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம்(18)


குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூரா திரூட

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)


ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே

கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்மே

ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்

த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் (20)


க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூகோபா

த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ

மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்

புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)


ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா (22)


ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய

மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)


அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ

பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே

பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்

மமாதிம் த்ருதம் நாசயோமா ஸூதத்வம்(24)


அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ

ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த

பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்

விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)


த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி

முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்

கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்

குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)


முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா

மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா

ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே

குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)


களத்ரம் ஸூதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா

யஜந்தோ நமந்ந ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸ்ர்வே குமார (28)


ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸூதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல(29)


ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்

ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத

அஹம் சாதிபாலோ பவான் லோக தாத

க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச (30)


நம கேகினே சக்தயே சாபி துப்யம்

நமச்சாக துப்யம் நம குக்குடாய

நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்

புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)


ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்

ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்தே

ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ

ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ (32)


புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய

படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய

ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்

லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)


Shanmugan Kavasam

Valli Gayatri Mantra

Kandhar Anupoothi

Agaththiyar Aruliya Sri Subramaniya Moola Mantra Shadashara Stotram in Tamil

 


Murugan mantra



Valli Gayatri Mantra

Shanmugan Kavasam

Kandhar Anupoothi

Murugan devotional mantra in Tamil | முருகன் பக்தி மந்திரம் தமிழில்

 


Murugan mantra in Tamil



Shanmugan Kavasam

Kandhar Anupoothi

Vel Mantra in Tamil

திங்கள், 25 மே, 2026

Chennai Kandha kottam Deivamani Malai Ramalinga Swaamigal Aruliyathu Tamil

 


Murugan mantra in Tamil


Shanmugan Kavasam

Valli Gayatri Mantra

Kandhar Anupoothi

Deivanai Ammaiyar Murugan Mantra in Tamil | தெய்வானை அம்மையார் முருகன் மந்திரம் தமிழில்

 


Deivanai Ammaiyar Murugan Mantra



 Kandhar Anupoothi

Shanmugan Kavasam

Murugan mantra for Miracles

Powerful Murugan Gayatri Mantra in Tamil | முருகன் காயத்ரி மந்திரம் தமிழில்

 


Powerful Murugan Mantra



Kandhar Anupoothi

Shanmugan Kavasam

Thiruppavai Pasuram - 27

Valli Gayatri Mantra in Tamil | வள்ளி காயத்ரி மந்திரம் தமிழில்

 


Valli Gayatri Mantra



Kandhar Anupoothi

Shanmugan Kavasam

Murugan mantra for Miracles

Powerful Murugan Mantra for Peace and Protection

 


Murugan mantra for Peace and Protection



Thiruppavai Pasuram - 26

Kandhar Anupoothi

Vel Maral maha Mantra in Tamil

Shanmugan Kavasam | சண்முக கவசம்

 

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்

தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி

எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன

திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)


ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க

தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க

சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க

நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2)


இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை

முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க

துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க…(3)



Shanmugan Kavasam


ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க

தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க

ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்

ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க…(4)




உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க

தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க

புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்

பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க…(5)


ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்

தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய

நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ

ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க…(6)


எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க

அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க

விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க

செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க…(7)


ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க

சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க

நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க

சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க…(8)


ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க

பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க

மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க

தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க…(9)




ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்

பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்

கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்

வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க…(10)


ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்

தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி

பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,

தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க…(11)


ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்

தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்

தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்

கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க…(12)


கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை

கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு

நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்

சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க…(13)


ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்

சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி

நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி

உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க…(14)



சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்

நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள

குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை

பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க…(15)


ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க

சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,

திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்

எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க…(16)


டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை

குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,

நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்

எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க…(17)


இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்

முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்

சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த

பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க…(18)


தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்

சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,

அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை

எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க…(19)


நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்

அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்

இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி

இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க…(20)



பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை

ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க…(21)


மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்

தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்

விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை

நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க…(22)


யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க

அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க

சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க

சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க…(23)


ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்

செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி

விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்

எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க…(24)


லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று

தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,

நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்

இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க…(25)


வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க

விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க

நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்

கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க…(26)


இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,

வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்

பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்

செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க…(27)


இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்

வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க

ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க

தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க…(28)


இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க

திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க

நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க

மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க…(29)


இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க

தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க

நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்

கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே…(30)



Kandhar Anupoothi

Vel Mantra in Tamil

Murugan Gayatri Mantra

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...