bhakthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bhakthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மே, 2026

Kolaru Pathigam lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் தமிழில்

 


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.





என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க

எருதேறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.



உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.



மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே


நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக

விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்

வரு காலமான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே!!


1008 Names of Shiva Lingam

Sivan Moola Mantra

Ayyanaar Mantra

Brahma Gayatri Mantra in Tamil | ப்ரம்மா காயத்ரி மந்திரம் தமிழில்

 


Brahma Gayatri Mantra



Om Mantra Chanting

Kali Gayatri Mantra in Tamil

Muneeswaran Gayatri Mantra

Powerful Shiva Mantra tamil | சக்தி வாய்ந்த சிவன் மந்திரம் தமிழில்

 


Powerful Shivan Mantra in Tamil



Kandhar Anupoothi

Lakshmi Narasimmar Mantra

Perumal Slogam in Tamil

Perumal Slogam in Tamil | பெருமாள் மந்திரம் தமிழில்

 


Perumal Slogam



Lakshmi Narasimmar Mantra

Kandhar Anupoothi

Vishnu Gayatri Mantra

Agaththiyar Aruliya Sri Subramaniya Moola Mantra Shadashara Stotram in Tamil

 


Murugan mantra



Valli Gayatri Mantra

Shanmugan Kavasam

Kandhar Anupoothi

Murugan devotional mantra in Tamil | முருகன் பக்தி மந்திரம் தமிழில்

 


Murugan mantra in Tamil



Shanmugan Kavasam

Kandhar Anupoothi

Vel Mantra in Tamil

திங்கள், 25 மே, 2026

Chennai Kandha kottam Deivamani Malai Ramalinga Swaamigal Aruliyathu Tamil

 


Murugan mantra in Tamil


Shanmugan Kavasam

Valli Gayatri Mantra

Kandhar Anupoothi

Deivanai Ammaiyar Murugan Mantra in Tamil | தெய்வானை அம்மையார் முருகன் மந்திரம் தமிழில்

 


Deivanai Ammaiyar Murugan Mantra



 Kandhar Anupoothi

Shanmugan Kavasam

Murugan mantra for Miracles

Murugan Mantra for Success | முருகன் மந்திரம் தமிழில்

 


Murugan mantra in Tamil


Arrokara Kosham Murugan Mantra in Tamil

Murugan Mantra in Tamil

Kandhar Anupoothi

Murugan Mantra in Tamil | ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் தமிழில்

 


Murugan mantra in Tamil



Thiruppavai Pasuram - 8

Thiruppavai Pasuram - 10

Thiruppavai Pasuram - 27

Murugan mantra in Tamil | முருகன் மந்திரம் தமிழில்

 


Murugan mantra in Tamil



Thiruppavai Pasuram - 14

Thiruppavai Pasuram - 15

Thiruppavai Pasuram - 18

Powerful Murugan Mantra in Tamil | மிகவும் சக்தி வாய்ந்த முருகன் மந்திரம் தமிழில்

 


Murugan mantra in Tamil



Thiruppavai Pasuram - 26

Thiruppavai Pasuram - 5

Thiruppavai Pasuram - 28

அரோகரா கோஷம் முருகன் மந்திரம் | Arrokara Kosham Murugan Mantra in Tamil

 


Arrokara Kosham Murugan Mantra



Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 29

Thiruppavai Pasuram - 30

Bala Subramaniya Mantra in Tamil | சக்தி வாய்ந்த பாலசுப்பிரமணிய மந்திரம் தமிழில்

 


Bala Subramaniya mantra in Tamil



Thiruppavai Pasuram - 26

Thiruppavai Pasuram - 20

Thiruppavai Pasuram - 9

Murugan devotional song - Kandha Saranam Kathir Vela Saranam Murugan Video Song

 


Murugan devotional songs




Thiruppavai Pasuram - 26

Thiruppavai Pasuram - 29

Thiruppavai Pasuram - 25

Thiruppavai Pasuram - 28 | திருப்பாவை பாசுரம் - 28

 


Thiruppavai Pasuram - 28




Thiruppavai Pasuram - 21

Thiruppavai Pasuram - 17

Thiruppavai Pasuram - 22

Thiruppavai Pasuram - 21 | திருப்பாவை பாசுரம் - 21



 

Thiruppavai Pasuram - 21



Thiruppavai Pasuram - 11

Thiruppavai Pasuram - 16

Thiruppavai Pasuram - 12

வியாழன், 21 மே, 2026

Selvam Kozhikkuthu Selvam Kozhikkuthu Mahalakshmi Song Lyrics in Tamil

 

யாதேஷூ சர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்

ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்



Selvam Kozhikkuthu Selvam Kozhikkuthu Video Song


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை

என் வீட்டில் நிறைத்து விட்டாள்… 

என் வீட்டில் நிறைத்து விட்டாள்…


ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்

சிந்தையில் ஏற்றிவிட்டாள் 

என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


கற்பகவிருஷமும் காமதேனுவையும்

பரிசாய் எனக்கு தந்தாள்… 

பரிசாய் எனக்கு தந்தாள்


அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும்

சீரென வழங்கி விட்டாள் 

வம்ச சீரென வழங்கி விட்டாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


பாற்கடலமுடென மார்போடணைத்தெனை

பாங்காய் ஊட்டி விட்டாள்…. 

பாங்காய் ஊட்டி விட்டாள்


பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்

மாயமாய் மாய்த்துவிட்டாள் 

இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


செந்தாமரை தாயே செந்தாமரை கையால்

சீர்பெற வாழ்த்தி விட்டாள் 

எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள்


செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்

சேயென சேர்த்தணைத்தாள் 

எனை சேயென சேர்த்தணைத்தாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


Unnaithan Padavanthen Murugan Video song

Solla solla Inikuthada Murugan song lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil

Ullathile Nee Irukka Murugan song lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil



Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...