Saraswati Mantra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Saraswati Mantra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மே, 2026

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி பாடல் வரிகள் | Agara Muthala song lyrics in Tamil

 

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே




அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி



இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்

உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்

உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்

ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்

அம்மா பேச வைத்தாய் 

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி



எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்

ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்

ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்

ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்

ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்

ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்

ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்

ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி


போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து

அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை


அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென

அருளும் தமிழும் திகழும் கடலென


கற்றவரும் கொற்றவரும் முற்றுமே

அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட

நின்னருளை தந்தருள்வாய்


உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர்

யானை சேனை படையுடன் வேந்தரு


பற்றும் பற்றை நீக்கிய ஞானி

பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி


தாயில்லாத பிள்ளையென்று

வாயில்லாத ஊமையென்று

ஆயிரங்களான கல்வி

வாய் திறந்து தந்த செல்வி


அன்னை உன்னை சரணமடைந்தேன்

தேவி


Vinayagar 108 Potri in Tamil

Vinayagar Agaval lyrics in Tamil


Om Mahasaraswate Namah Mantra Chanting | Saraswati Mantra

 


Saraswati Mantra


Vinayagar Agaval lyrics in Tamil

Karpoora Nayagiye Kanaga Valli Amman devotional song lyrics in Tamil

Hanuman Chalisa lyrics in Tamil

Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...