sivan song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sivan song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஆகஸ்ட், 2026

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்


பண்ணிநேர் மொழியாள்

உமை பங்கரோ.....ஓ ஓ

மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ...

கண்ணினால் உமைக் காண கதவினை...

திண்ணமாக திறந்தருள் செய்மினேன்...



பிரதோஷ சிவன் பக்தி பாடல்


ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஅ....ஆ...ஆ....ஆ...

ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......


தாழ் திறவாய்...

மணிக் கதவே தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஅ....ஆ...ஆ....ஆ...

ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......



மனக் கதவும் திறந்த பரம் பொருளே

திருக் கதவும் திறக்க வரம் அருளே

மனக் கதவும் திறந்த பரம் பொருளே

திருக் கதவும் திறக்க வரம் அருளே


ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....


இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே


ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ......


இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்

இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்


ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆடும் திருவடி கோலம் அறிந்திட

அரனே தாழ் திறவாய்

அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட

சிவனே தாழ் திறவாய்

அருள் நெறி தெளிவுற திருமறை புகழ் பெற

அன்பே தாழ் திறவாய்

ஒரு முறை இரு முறை பல முறை கேட்டேன்

ஒலியே தாழ் திறவாய்

இறைவா தாழ் திறவாய்

என் தலைவா தாழ் திறவாய்

கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்......


திருச்சிற்றம்பலம்........திருச்சிற்றம்பலம்


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே


Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Parthene Uyirin Vazhiyae song lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil



வியாழன், 16 ஜூலை, 2026

இசையாய் தமிழாய் இருப்பவனே பாடல் வரிகள் தமிழில் | Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

 

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..


இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..




பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே..


இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..

நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..


தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..


எந்தவேளையும் மறதிடாது

மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..

சந்தமார்குழலி இந்துநேர்வதனி

மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..


தவினுறு முகமதில் இளநகையே

கனிவுறு விழிகளில் அருள் மழையே..

சுவைபட வருவதும் எழுசுரமே

துணையென மொழிவதும் உயர்தமிழே..


மந்திரமாய்..

மாதவமாய்..

தந்திரமாய்..

தாரகமாய்..

வழிபடும் அடியவர் இருவினை பொடிபட

மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே...


இசையாய் தமிழாய் இருப்பவனே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Sivan 108 Potri in Tamil

புதன், 27 மே, 2026

Ondranavan Uruvil Irandanavan Sivan Song Lyrics in Tamil | ஒன்றானவன் உருவில் சிவன் பக்தி பாடல் வரிகள் தமிழில்



ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில்
மூன்றானவன் ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில்
மூன்றானவன் நன்றான
வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்




இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் ஆஆ ஆஆ ஆஆ
இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் இன்னிசை
ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில்
எட்டானவன் சித்திக்கும்
பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்


பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப்
பெற்றானவன் முற்றாதவன்
மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும்
நடுவானவன் முன்னைக்கும்
பின்னைக்கும் நடுவானவன்


ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி
கொண்டானவன் சரிபாதி
பெண்மைக்குத் தந்தானவன்


காற்றானவன்
குளிரானவன் நீரானவன்
நெருப்பானவன் நேற்றாகி
இன்றாகி என்றைக்கும்
நிலையாகி ஊற்றாகி
நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்




Pitha Pirai Soodi Sivan devotional song lyrics in Tamil | பித்தா பிரைசூடி பெருமாளே சிவன் பக்தி பாடல் வரிகள் தமிழில்

 

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

எத்தால் மறவாதே நினைக்கிறேன்

மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால்

வெண்ணைநல்லூர் அருள்துறையுள்

அத்தா… உனக்கு ஆளாய்

இனி அல்லென் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே



Pitha Pirai Soodi Sivan song


இறைவா

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை

அந்த அம்மை இல்லாமல்

இந்த பிள்ளை இல்லை

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே


பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக

அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக

அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெறுக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெறுக

எந்தன் சந்ததியே உந்தனுக்கு

அடிபணிய இறைவா

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே


கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே

கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே

கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே

வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே

வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே

வந்து என்னை என்றும் ஆளுகின்ற

பரம்பொருளே இறைவா


சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

இறைவா


Thiruvembaavai

Sivan 108 Potri in Tamil

Kolaru Pathigam

Thiruvembaavai song lyrics in Tamil | திருவெம்பாவை பாடல் வரிகள் தமிழில்

 

திருவெம்பாவை பாடல் 1


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்



Thiruvembaavai


திருவெம்பாவை பாடல் 2


பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 3


முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 4


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்

தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 5


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 6


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 7


அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 8


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்

ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே

நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்

சித்தம் களிகூர நீரொருகால் ஓவா

நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து

அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 16


முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 19


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.


Sivan 108 Potri in Tamil

Kolaru Pathigam

Sivapuranam


Eagambaresane Eagalingane Om Namah Shivaya Sivan Song in Tamil | ஏகாம்பரேசனே சிவன் பாடல்

 


Eagambaresane Eagalingane Om Namah Shivaya Song




Ayyanaar Mantra

Sivan Thuthi in Tamil

Kolaru Pathigam

Odi Odi Odi Utkalantha Sivan Song Lyrics in Tamil | ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடல் வரிகள்

 

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய



என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ

என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே



Odi Odi Odi Utkalantha Sivan Song


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா

கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே

ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்

ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்

அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய




இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு

எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்

உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல

மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்

நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்

என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை

நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை

அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்

எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய




பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை

பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை

மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை

மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ

கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ

இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ

செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்

நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்

ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்

தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே

நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை

நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே

நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்

இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ

இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை

எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


காரகார காரகார காவல் ஊழி காவலன்

போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்

மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ

ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்

கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்

மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்

அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்

உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்

மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்

சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே




ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்

தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய

வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே

உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய



 Brahma Gayatri Mantra

Ayyanaar Mantra

Kolaru Pathigam

சனி, 16 மே, 2026

Om Shivoham Sivan devotional songs | ஓம் சிவோஹம் சிவன் பக்தி பாடல் வரிகள்



ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்


ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால
ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய
ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர
ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட
ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர
ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம
ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல
ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய
தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்


ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச
ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே
ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய
சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ
வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய
நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய
தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா


அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா
சூரனா ஜெகத் காரனா சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா
சூலபானி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா
யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற
சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ
மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம்
கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ
ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்

சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

தனதன தனதன தனதன தனதன தன
சஹச ஹத்ரசப்த விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப
சிவடப டுப நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்


Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...