புதன், 6 மே, 2026

Azhagendra Solluku Muruga song lyrics in Tamil | அழகென்ற சொல்லுக்கு முருகா

 

முருகா! முருகா!


அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா



Azhagendra Solluku Murugan video song 


சுடராக வந்த வேல் முருகா கொடும்

சூரரை போரிலே வென்ற வேல் முருகா


சுடராக வந்த வேல் முருகா கொடும்

சூரரை போரிலே வென்ற வேல் முருகா


கனிக்காக மனம் நொந்த முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா

முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா


ஆண்டியாய் நின்ற வேல் முருகா

உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா…


ஆண்டியாய் நின்ற வேல் முருகா

உன்னை அண்டினோர் இன்பமே முருகா


பழம் நீ அப்பனே முருகா

பழம் நீ அப்பனே முருகா

ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா


குன்றாறும் குடிகொண்ட முருகா

பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா


குன்றாறும் குடிகொண்ட முருகா

பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா


சக்தி உமை பாலனே முருகா

சக்தி உமை பாலனே முருகா

மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா


அன்பிற்கு எல்லையோ முருகா

உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா


அன்பிற்கு எல்லையோ முருகா

உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா


கண்கண்ட தெய்வமே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா

எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா


ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா

பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா


ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா

பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா


அரகரா சண்முகா முருகா

அரகரா சண்முகா முருகா

என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா


முருகா முருகா முருகா

Sri Ranga Naatharukku Amman devotional songs lyrics tamil devotional

Maruthamalaiku Neenga Vanthu song lyrics in Tamil

Aadi Vanthen Amman devotional songs lyrics tamil

Santhana Malligaiyil song lyrics in Tamil

Abiraami Anthaathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...