Mahalakshmi song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Mahalakshmi song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மே, 2026

Selvam Kozhikkuthu Selvam Kozhikkuthu Mahalakshmi Song Lyrics in Tamil

 

யாதேஷூ சர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்

ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்



Selvam Kozhikkuthu Selvam Kozhikkuthu Video Song


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை

என் வீட்டில் நிறைத்து விட்டாள்… 

என் வீட்டில் நிறைத்து விட்டாள்…


ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்

சிந்தையில் ஏற்றிவிட்டாள் 

என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


கற்பகவிருஷமும் காமதேனுவையும்

பரிசாய் எனக்கு தந்தாள்… 

பரிசாய் எனக்கு தந்தாள்


அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும்

சீரென வழங்கி விட்டாள் 

வம்ச சீரென வழங்கி விட்டாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


பாற்கடலமுடென மார்போடணைத்தெனை

பாங்காய் ஊட்டி விட்டாள்…. 

பாங்காய் ஊட்டி விட்டாள்


பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்

மாயமாய் மாய்த்துவிட்டாள் 

இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


செந்தாமரை தாயே செந்தாமரை கையால்

சீர்பெற வாழ்த்தி விட்டாள் 

எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள்


செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்

சேயென சேர்த்தணைத்தாள் 

எனை சேயென சேர்த்தணைத்தாள்


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது

செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது 

செல்வாக்கு பெருகுதம்மா

வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா


Unnaithan Padavanthen Murugan Video song

Solla solla Inikuthada Murugan song lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil

Ullathile Nee Irukka Murugan song lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil



Baakyamthan Lakshmi Vaarumammaa Song Lyrics in Tamil | பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா பாடல் வரிகள்

 

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

முன்னோர்கள் செய்த

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா



Baakyamthan Lakshmi Vaarumammaa video song


என் அன்னையே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்ய சுமங்கலி பூஜையின் அழைக்க

மத்தொரு தயிரினை வெண்ணையாய்

ஜொலிக்க


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் அன்னையே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


கனக விருஷமாய் கனமழை தருக

மனைகள் எங்கிலும் திரவியம் பெருக

கனக விருஷமாய் கனமழை தருக

மனைகள் எங்கிலும் திரவியம் பெருக

தினகரகோடி உன் மேனியில் உருக

ஜனக ராஜன் திருகண்மணி வருக


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


சங்கநிதி முதல் நவநிதி தாராய்

கங்கண கையால் மங்களம் சேராய்

சங்கநிதி முதல் நவநிதி தாராய்

கங்கண கையால் மங்களம் சேராய்

குங்கும பூவாய் பங்கய பாவாய்

வேங்கடரமணரின் பூங்கொடி வாராய்


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்

நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்

நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்

சக்திக்கேற்றபடி சாது போஜனம்

சாப்பிட்டு தருவாய் அட்சதை சீதனம்


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் அன்னையே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த

சுக்கிர வார பூஜையில் இருந்து

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த

சுக்கிர வார பூஜையில் இருந்து


அக்கறையோடு சந்தனம் குழைத்து

சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil

Solla solla Inikuthada Murugan song lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil

Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...