செவ்வாய், 12 மே, 2026

Ulagangal Yaavum Un Arasaangamae Song Lyrics in Tamil | உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே பாடல் வரிகள் | Thiruvarul

 

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!




நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!


நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!


மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!


மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!


ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு

பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!

உந்தன் வரம் வேண்டுமே!


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!


பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!


பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!


நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்

நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே!


நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா

அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!

முருகனருள் வேண்டுமே!


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional song lyrics in Tamil

Lalitha Sahasranaman Mantra in Tamil

Vel Maral maha Mantra in tamil

Santhana Malligaiyil amman devotional song lyrics in Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil | மருதமலை மாமணியே முருகையா பாடல் வரிகள் | Deivam Movie

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?…… கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?….. தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…....