சனி, 2 மே, 2026

சந்தன மல்லிகையில் தூளி கட்டிபோட்டேன் பாடல் வரிகள் | Santhana Malligaiyil Song Lyrics in Tamil


சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி


Santhana Malligaiyil Song Lyrics in Tamil 


சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த
ஆத்தா கண்வளர ஆரிராரோ பாடும் புள்ள
எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல
தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திருப்பாதம்
அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

ஒருவாய் சோறுனக்கு ஊட்டி விட்ட வேளையில

உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
அதநான் ருசி பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil | மருதமலை சத்தியமா பாடல் வரிகள் தமிழில்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


ஆதிசிவன் மேல சத்தியமா

அந்த ஆனைமுகன் மேல சத்தியமா

ஆறுமுகன் மேல சத்தியமா

அந்த ஞான பழம் மேல சத்தியமா



Maruthamalai Sathiyama Video Song


ஒத்த மனசுல மொத்த நெனப்புல

கூடி இருக்குற சண்முகா

ஆறுபடையும் சண்முகா

நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


திருத்தணி வீட்டுக்குள்ளே

ஒரு தீபம் தெரியுமே சண்முகா

தீபம் தெரியுமே சண்முகா

உன் பாதம் தெரியுமே சண்முகா


அரோகரா கோசத்துலே

உன் முகம் சிரிக்குமே சண்முகா

முகம் சிரிக்குமே சண்முகா

ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா


திருத்தணி வீட்டுக்குள்ளே

ஒரு தீபம் தெரியுமே சண்முகா

தீபம் தெரியுமே சண்முகா

உன் பாதம் தெரியுமே சண்முகா


அரோகரா கோசத்துலே

உன் முகம் சிரிக்குமே சண்முகா

முகம் சிரிக்குமே சண்முகா

ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா


உக்கிர நாளிலும் சண்முகா

நல்ல உச்சவ நாளிலும் சண்முகா

நாளும் கிழமையும் சண்முகா

ஒரு உண்மைய சொல்லவா சண்முகா


ஆறுபடையிலும் ஆறுகாலத்திலும்

பூஜை நடக்குமே சண்முகா

பூஜை நடக்குமே சண்முகா

நல்ல பூஜை நடக்குமே சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


பழமுதிர் சோலையிலே

ஒரு தேரு நடக்குமே சண்முகா

தேரு நடக்குமே சண்முகா

தங்க தேரு நடக்குமே சண்முகா


ராஜநடை போட்டு வந்து

புதுயோகம் கொடுக்குமே சண்முகா

யோகம் கொடுக்குமே சண்முகா

சுப யோகம் கொடுக்குமே சண்முகா


பழமுதிர் சோலையிலே

தேரு நடக்குமே சண்முகா

தேரு நடக்குமே சண்முகா

தங்க தேரு நடக்குமே சண்முகா


ராஜநடை போட்டு வந்து

புதுயோகம் கொடுக்குமே சண்முகா

யோகம் கொடுக்குமே சண்முகா

சுப யோகம் கொடுக்குமே சண்முகா


ஊரு உலகமும் சண்முகா

தேருவடம் இழுக்குமே சண்முகா

பக்தி வெள்ளத்திலே சண்முகா

உன் தேரு மிதக்குமே சண்முகா


ராஜ ரத்தத்திலே சிம்மாசனத்திலே

வீதி உலா வரும் சண்முகா

வீதி உலா வரும் சண்முகா

என் நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


தென்பழனி சுத்தி சுத்தி

மயில் பறக்குது சண்முகா

மயில் பறக்குது சண்முகா

உன்னை தேடி பறக்குது சண்முகா


கிட்ட வந்து எட்டி நின்னு

என்னை பாத்து சிரிக்கிது சண்முகா

பாத்து சிரிக்கிது சண்முகா

கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா


தென்பழனி சுத்தி சுத்தி

மயில் பறக்குது சண்முகா

மயில் பறக்குது சண்முகா

உன்னை தேடி பறக்குது சண்முகா


கிட்ட வந்து எட்டி நின்னு

என்னை பாத்து சிரிக்கிது சண்முகா

பாத்து சிரிக்கிது சண்முகா

கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா


வீரபாகுவின் பக்கமா

அந்த வீரவேலுவின் பக்கமா

அஞ்சுகரனின் பக்கமா

அந்த ஐராவதம் பக்கமா


தங்கநிறத்துல ரெண்டு கண்ணுக்குள்ள

கொழுவிருக்கிற சண்முகா

நீ கொழுவிருக்கிற சண்முகா

என் கண்ணுக்குள்ளதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


திருச்செந்தூர் கோயிலிலே

வேலாடனும் சண்முகா

வேலாடனும் சண்முகா

வெற்றி வேலாடனும் சண்முகா


தில்லையாண்டான் தில்லையென

வரம் கொடுக்கனும் சண்முகா

வரம் கொடுக்கனும் சண்முகா

நீ வரம் கொடுக்கனும் சண்முகா


திருச்செந்தூர் கோயிலிலே

வேலாடனும் சண்முகா

வேலாடனும் சண்முகா

வெற்றி வேலாடனும் சண்முகா


தில்லையாண்டான் தில்லையென

வரம் கொடுக்கனும் சண்முகா

வரம் கொடுக்கனும் சண்முகா

நீ வரம் கொடுக்கனும் சண்முகா


கண்ணு படும்படி சண்முகா

இந்த காலம் முழுவதும் சண்முகா

உன்னை நினைக்குறேன் சண்முகா

நல்ல செல்வம் கொளிக்கனும் சண்முகா


சொன்ன வரங்கள அள்ளி கொடுக்குற

கொடை வள்ளலே சண்முகா

கோடி வணக்கம் சண்முகா

பல கோடி வணக்கம் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


அய்யா மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


திருப்பரங்குன்றத்திலே

ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா

பாட்டு படிக்கணும் சண்முகா

புது பாட்டு படிக்கணும் சண்முகா


புள்ளி மயில் ஏறிவந்து

நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா

கேட்டு ரசிக்கணும் சண்முகா

வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா


திருப்பரங்குன்றத்திலே

ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா

பாட்டு படிக்கணும் சண்முகா

புது பாட்டு படிக்கணும் சண்முகா


புள்ளி மயில் ஏறிவந்து

நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா

கேட்டு ரசிக்கணும் சண்முகா

வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா


பூபாலமும் ஆடுமே

ஒரு ஆலோலமும் பாடுமே

கந்த சஷ்டியும் ஆடுமே

உன் கந்த புராணமும் பாடுமே


சின்ன நிலவிலும் சின்ன விளக்கிலும்

காட்சி கொடுக்கணும் சண்முகா

உன்னை நினைக்கிறேன் சண்முகா

என் நெஞ்சுக்குள்ளேதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


ஆமா மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


சுவாமிமலை உச்சியிலே

உன் கொடி பறக்குமே சண்முகா

கொடி பறக்குமே சண்முகா

சேவல் கொடி பறக்குமே சண்முகா


ஆடி வரும் காவடிக்கு

அது சொல்லி கொடுக்குமே சண்முகா

சொல்லி கொடுக்குமே சண்முகா

வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா


சுவாமிமலை உச்சியிலே

கொடி பறக்குமே சண்முகா

கொடி பறக்குமே சண்முகா

சேவல் கொடி பறக்குமே சண்முகா


ஆடி வரும் காவடிக்கு

அது சொல்லி கொடுக்குமே சண்முகா

சொல்லி கொடுக்குமே சண்முகா

வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா


எந்த நேரத்திலும் சண்முகா

நீ நின்ற கோலத்திலே சண்முகா

அண்டும் வினைகளை விரட்டி

குலம் காக்கும் தெய்வமே சண்முகா


சன்னிதானம் அதை சுத்தி வளம் வர

நெஞ்சம் உருகுதே சண்முகா

நெஞ்சம் உருகுதே சண்முகா

என் உள்ளம் உருகுதே சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil






வெள்ளி, 12 செப்டம்பர், 2025

ஷஷ்டி விரதத்தின் மகிமை மற்றும் அதன் பலன்கள்


ஷஷ்டி விரதம் (Shashti Viratham) என்பது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். குறிப்பாக சுப்பிரமண்ய சுவாமி, ஸ்கந்தன், கார்த்திகேயன், முருகன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் ஆறுபடைவீடுகளின் கடவுளுக்கான பக்தியை வெளிப்படுத்தும் சிறப்பான நாளாகும்.




இது தமிழ் மாதத்தின் ஆறாம் நாளில் (ஷஷ்டி திதியில்) அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். ஆறு நாட்களும் விரதம் இருந்து, இறுதி நாளில் சூரசம்ஹாரத்தை நினைவுகூர்ந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வது வழக்கம்.


ஷஷ்டி விரதத்தின் மகிமை


1. சூரசம்ஹாரம் நினைவாக

சூரபத்மாசுரனை அழித்த தினமாகவே ஸ்கந்தஷஷ்டி அனுசரிக்கப்படுகிறது. 


Sasti murugan devotional images

2. ஆன்மீக சுத்தம்

விரத காலத்தில் உண்ணாநோன்பு அல்லது சாத்துவிக உணவு மட்டுமே உட்கொள்வதால் உடலும் மனமும் சுத்தமாகி, பக்தி அதிகரிக்கும்.


3. பக்தி மற்றும் ஒழுக்கம் வளர்ச்சி

தினமும் முருகனின் பாடல்கள், கந்த சஷ்டி கவசம், சுப்ரமண்ய சுப்ரபாதம் போன்றவற்றை ஜபிப்பது மனதை நிலைநிறுத்தி, நற்பண்புகளை வளர்க்கிறது.


4. குடும்ப நலம் மற்றும் அமைதி

குடும்பத்தில் சாந்தி, ஒற்றுமை, சந்தோஷம் நிலைத்திருக்க முருகன் அருள்பாலிப்பார் என்று நம்பப்படுகிறது.


Kandha Guru Kavasam Lyrics in tamil


ஷஷ்டி விரதத்தின் பலன்கள்


1. ஆரோக்கியம் & சக்தி – நோன்பு உடல் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


2. தடை நீக்கம் – வாழ்க்கையில் வரும் இடையூறுகள், மனக்குழப்பங்கள் விலக உதவுகிறது.


Murugan images with flowers decoration

3. வெற்றி மற்றும் வளம் – தொழில், கல்வி, முயற்சிகளில் வெற்றி, செல்வம், செழிப்பு கிடைக்கும்.


4. குழந்தைப் பாக்கியம் – சுப்ரமண்ய சுவாமி அருளால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.


5. மன அமைதி – கோபம், பதட்டம், மன அழுத்தம் குறைந்து மனம் தெளிவாகும்.


சிறப்பு வழிபாடுகள்


1. காலை, மாலை முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்தல்.


2. கந்த சஷ்டி கவசம், சுப்ரமண்ய சுப்ரபாதம், சுப்ரமண்ய புஜங்கம் போன்றவற்றை பாராயணம் செய்தல்.


Murugan closeup images

3. ஆறாம் நாள் இரவில் சூரசம்ஹார வைபவத்தை நேரில் காண்பது அல்லது குறைந்தது மனதில் தியானிப்பது.


வழிபாட்டை பக்தியோடு, மனசுத்தியோடு செய்தால் முருகப்பெருமான் பக்தர்களின் வாழ்க்கையில் தடைகளை நீக்கி, வெற்றியையும் வளத்தையும் அளிப்பார்.




புதன், 10 செப்டம்பர், 2025

விநாயகர் எப்படி தோன்றினார்? அவரின் வாழ்க்கை வரலாறு | Vinaayagar Life History in Tamil


விநாயகர் என்பவரை கணபதி, விநாயகா, மூஷிகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.  இவர் ஹிந்து சமயத்தின் முதன்மையான தெய்வங்களில் ஒருவர். எந்த சுப நிகழ்வும் தொடங்கும் போது முதலில் விநாயகரைப் பூஜிப்பது வழக்கம். அவர் விக்னங்களை (தடைகள்) நீக்குபவர் என்றும், ஞானத்தையும் செல்வத்தையும் அருள்பவர் என்றும் அறியப்படுகிறார்.


 Vinayagar 108 Potri in Tamil


விநாயகர் எப்படி தோன்றினார்?

புராணங்களில் விநாயகரின் தோற்றம் குறித்து பல கதைகள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான சில:


1.பார்வதி தேவி படைத்தது


  • பார்வதி தேவி ஸ்நானம் செய்யும்போது யாரும் உள்ளே வரக்கூடாது என்று காவலனாக ஒருவரை வேண்டி, தனது உடலில் இருந்த மஞ்சளில் இருந்து ஒரு உருவம் செய்து அதில் உயிர் ஊட்டி, விநாயகரை உருவாக்கினாள்.


  • அந்தச் சிறுவன் (விநாயகர்) சைவனாக நின்றான். அப்போது சிவபெருமான் அங்கே வந்து உள்ளே செல்ல நினைத்தார். ஆனால் விநாயகர் அனுமதிக்கவில்லை.


  • கோபம் கொண்ட சிவன் தனது திரிசூலத்தால் அவரின் தலையை அறுத்தார்.


  • பார்வதி தேவியின் துயரத்தை கண்டு, சிவபெருமான் ஒரு யானையின் தலையை கொண்டு வந்து, அதனை விநாயகரின் உடலில் பொருத்தினார்.


  • இவ்வாறு யானைத்தலை கொண்ட விநாயகர் பிறந்தார்.

Kandha Guru Kavasam Lyrics in Tamil


2.அக்னி மற்றும் பரமேஸ்வரனின் ஆசீர்வாதம்


சில புராணங்களில், விநாயகர் சிவபெருமான் மற்றும் பார்வதியின் தெய்வீக சக்தியால், அக்னி மற்றும் பிற தேவர்கள் வழிபாட்டின் மூலம் தோன்றினார் என்றும் கூறப்படுகிறது.


Vinayagar images with beautiful background


விநாயகரின் வாழ்க்கை வரலாறு


  • பிறப்பின் பின் ஆசீர்வாதம்: விநாயகர் தலையில் யானை முகத்தைக் கொண்டு பிறந்ததும், தேவர்கள் அனைவரும் அவரை வணங்கி, "விநாயகர்" என்ற பெயரை சூட்டினர். அதாவது "விநாயகன்" என்பது விக்னங்களை (தடைகள்) அகற்றுபவர் என்பதாகும்.


  • முதன்மை தெய்வம்: எந்த ஒரு யாகம், பூஜை, திருமணம், சுப நிகழ்வு போன்றவற்றிலும் முதலில் விநாயகரை வணங்க வேண்டும் என்ற வரம்பை சிவபெருமான் அளித்தார்.


  • ஞானமும் புத்திசாலித்தனமும்: விநாயகர், அறிவில் முதன்மை வாய்ந்தவர். ஒரு கதையில், சிவபெருமான் உலகைச் சுற்றி வரும்படி கார்த்திகேயனுக்கும் விநாயகருக்கும் சொல்கிறார். விநாயகர் சிவனை சுற்றி வந்து நீங்கள் தான் உலகம் என்று சொல்லி பரிசை வென்றார்.


  • இனிய இயல்பு: விநாயகர் எளிதில் மக்களால் வணங்கப்படுகிறார். அவர் புலி, சிங்கம் போன்ற பயங்கர வாகனங்களை அல்லாமல், எலியை வாகனமாகக் கொண்டார். இதன் மூலம் எளிமையும் கருணையும் வெளிப்படுகிறது.


விநாயகர் வழிபாட்டின் சிறப்புகள்


1. விக்னங்களை நீக்குபவர் – வாழ்க்கையில் வரும் சிரமங்களையும் தடைகளையும் அகற்றி அருள்புரிவார்.


2. ஆரோக்கியம், அறிவு, செல்வம் – யாரும் எளிதாக அவரை வழிபடலாம்; குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் தெய்வம்.


3. தேவர்களின் ஆசீர்வாதம் – விநாயகர் வழிபாடு பிற தெய்வ வழிபாட்டிற்கான அடித்தளம்.


விநாயகர் என்பவர் தடைகளை அகற்றும் சக்தி, ஞானம் மற்றும் செல்வம் அருளும் தெய்வத்தின் உருவகமாக தோன்றினார். அவரது வாழ்க்கை வரலாறு, அன்பு, எளிமை, அறிவு ஆகியவற்றின் மகத்துவத்தை மனிதகுலத்திற்கு கற்பிக்கிறது.


Vinaayagar Agaval Lyrics in tamil



செவ்வாய், 9 செப்டம்பர், 2025

முருகன் செய்த அற்புதங்கள் | Murugan Miracles

தமிழகத்தின் பெருமைமிகு கடவுள்களில் முதன்மையானவர் அருள்மிகு முருகப்பெருமான். வேலாயுதத்தை ஏந்தியவராகவும், கந்தன், சுப்பிரமணியன், சரவணன், வேலவன், ஷண்முகன் எனப் பல நாமங்களால் அழைக்கப்படுபவராகவும் அவர் அறியப்படுகிறார். இறைஅன்பர்களின் வேண்டுதலுக்கு உடனே அருள் புரிவதில் முருகப்பெருமான் புகழ்பெற்றவர். பல தலங்களில் பக்தர்களுக்கு அவர் செய்த அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன.


Murugan Powerful Mantra in tamil 


1. சூரபத்மன் வதம் – உலக காப்பாற்றல்


அசுரர்களின் துன்புறுத்தலால் உலகம் துன்புற்றபோது, இறைவன் சிவபெருமானிடம் உதவி கோரப்பட்டது. அப்பொழுது சிவனின் சக்தியால் நெற்றிக்கண்யில் பிறந்தவர் முருகன். அவர் சூரபத்மன் மற்றும் அசுரர்களை வேலால் வதம் செய்து உலகத்தை இரட்சித்தார். இது முதன்மையான அற்புதமாகக் கருதப்படுகிறது.


சூரபத்மன் வதம் முருகன் அற்புதங்கள் படம்


2. அருணகிரிநாதருக்கு அருள்


திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் துன்புற்ற நிலையில் சிகரம் ஏறி தற்கொலை செய்ய நினைத்தார். அப்பொழுது முருகன் தோன்றி, “உனது வாழ்வின் நோக்கம் பக்திப் பாடல்களில் உள்ளது” என அருளினார். அதன்பின் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை இயற்றி, கோடிக்கணக்கான மக்களை ஆன்மீகப் பாதைக்கு இட்டுச் சென்றார்.


Kandha Guru Kavasam Lyrics


3. பாலமுருகனின் தரிசனம் – பாலநகரில்


பலமுறை பக்தர்கள் அவரை சிறுவனாகவே தரிசித்தனர். பாலமுருகனாக வந்து, பக்தர்களுக்கு அருள் புரிந்த சம்பவங்கள் அநேகம். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு முருகன் சிறுவனாக வந்து ஆசீர்வதித்து, பிள்ளைப் பெற வைத்த அற்புதங்கள் தமிழகத்தில் பரவலாக பேசப்படுகின்றன.


Murugan devotional images


4. பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனடி பதில்


முருகப்பெருமான், “வேலாயுதனாகவே” பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுபவர் என அறியப்படுகிறார்.


  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்க அருள் புரிந்தார்.


  • கல்வியில் முன்னேற்றம் வேண்டி மாணவர்கள் வேண்டினால், அறிவும் தைரியமும் அளித்தார்.


  • தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் அற்புத சக்தியாகவே இவர் உள்ளார்.


முருகப்பெருமானின் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. அவர் அருளால் பக்தர்களின் வாழ்க்கை மாற்றம் அடைகிறது. அவர் தரும் நம்பிக்கை, தைரியம், கருணை – இவை அனைத்தும் ஆன்மீகப் பாதையில் முன்னேற உதவுகின்றன. “முருகனைச் சரணடைந்தால் அற்புதங்கள் நிகழ்வது நிச்சயம்” என பக்தர்கள் நம்புகின்றனர்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

Thiruppavai 30 Pasuram with Tamil Lyrics | திருப்பாவை முப்பது பாடல் வரிகளுடன்


Thiruppavai 30 Pasuram with Tamil Lyrics

கருடனின் மகிமைகள்

நோய் பயம் நீங்க தன்வந்திரி பகவான் மந்திரம்


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;


நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!


சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!


கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,


ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,


கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்


நாரா யணனே, நமக்கே பறைதருவான்,


பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1)


Kamatchi Amman Temple History


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்


செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்


பையத் துயின்ற பரமன் அடிபாடி,


நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி


மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;


செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;


ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி


உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். (2)


Thiruppaavai Aandaal nachiyar images



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி


நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,


தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து


ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்


பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,


தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி


வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்


நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். (3)



ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்


ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,


ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து


பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்


ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,


தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்


வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்


மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)



மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,


தூய பெருநீர் யமுனைத் துறைவனை,


ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,


தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,


தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது


வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்


போய பிழையும் புகுதருவான் நின்றனவும்


தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். (5)



புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்


வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?


பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,


கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,


வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,


உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்


மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்


உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)



கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து


பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!


காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து


வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்


ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?


நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி


கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?


தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். (7)



கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு


மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்


போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்


கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய


பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு


மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய


தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்


ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (8)


Aandaal beautiful images with peacock in her hand


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,


தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்


மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;


மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?


ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?


‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று


நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9)



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!


மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?


நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்


போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்


கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்


தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?


ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!


தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய். (10)



கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,


செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்


குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!


புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,


சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்


முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,


சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ


எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். (11)



கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி


நினைத்து முலைவழியே நின்றுபால் சோர


நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!


பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்


சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற


மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!


இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?


அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)



புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்


கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,


பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;


வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;


புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!


குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,


பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்


கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். (13)



உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்


செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;


செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். (14)


Aandaal images with green colour background


எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?


சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;


‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’


‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’


‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’


‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’


வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க


வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். (15)



நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய


கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண


வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;


ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;


தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;


வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ


நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். (16)



அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்


எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;


கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!


எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;


அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த


உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;


செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!


உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)



உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,


நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!


கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;


வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்


பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;


பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,


செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப


வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (18)



குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்


மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்


கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்


வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;


மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை


எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,


எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,


தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19)



முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று


கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;


செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு


வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;


செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்


நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;


உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை


இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். (20)



ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப


மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்


ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;


ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்


தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;


மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்


ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,


போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21)


Aandaal dreaming images


அங்கண் மாஞாலத் தரசர் அபிமான


பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே


சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;


கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,


செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?


திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,


அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்


எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். (22)



மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்


சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,


வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,


மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,


போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்


கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய


சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த


காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)



அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,


சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,


பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,


கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,


குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,


வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,


என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்


இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். (24)



ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்


ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,


தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த


கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை


அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்


திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி


வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)


Aandaal and perumal mirror images


மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்


மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்


ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன


பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே


போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,


சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,


கோல விளக்கே, கொடியே, விதானமே,


ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். (26)



கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை


பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;


நாடு புகழும் பரிசினால் நன்றாக,


சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே


பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;


ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு


மூடநெய் பெய்து முழங்கை வழிவார


கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)



கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;


அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்


பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;


குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு


உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!


அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்


சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,


இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)



சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்


பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;


பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;


இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு


உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;


மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)



வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்


திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி


அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்


பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன


சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே


இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்


செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்


எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். (30)






சனி, 30 ஆகஸ்ட், 2025

Kamatchi Amman Temple History | காமாட்சி அம்மன் ஸ்தல வரலாறு


இந்தியாவின் ஆன்மிக மையமாக விளங்கும் காஞ்சிபுரம், “கல்யாண நகரம்” என்றும், “தேவகோட்டம்” என்றும் போற்றப்படுகிறது. அந்த நகரின் பெருமையைக் கூட்டும் முக்கிய ஆலயம் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில் ஆகும். காமாட்சி அம்மன் தனி ஆலயமாக அருள்பாலிக்கும் சில தலங்களில், காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் திருக்கோவில் முதலிடம் பெறுகிறது.



காமாட்சி அம்பாளின் மகிமை


கா” என்பது சரஸ்வதியை, 

மா” என்பது மகாலட்சுமியை, 

அச்சி” என்பது சக்தியைக் குறிக்கும். 

இத்தகைய மூன்று தேவிகளின் சங்கமமாக ஸ்ரீ காமாட்சி அம்பாள் அருள்பாலிக்கிறார்.


1. சரஸ்வதியின் அறிவும்,


2. மகாலட்சுமியின் செல்வ வளமும்,


3. பார்வதியின் சக்தியும்


இவைகளை ஒரே வடிவில் பெற்ற தேவியாக காமாட்சி திகழ்கிறார்.


ஸ்தல வரலாறு


புராணக் கதைகளின்படி, பார்வதி தேவியை சிவபெருமான் பரீட்சிக்கும்படி இங்கு தபம் செய்ய வைத்தார். சிவனைத் திருமணம் செய்யும் நோக்கில், பார்வதி வில்வமரம் அடியில் பஞ்சாக்ஷர ஜபம் செய்து தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் அவரது பக்தி பரிசோதனை செய்ய கலியுகத்தில் உலகிற்கு அருள்புரியும் வாக்குத்தத்தம் அளித்தார்.


Kamatchi Amman beautiful images


மேலும், இங்கு காமாட்சி அம்மன் சுக்லவர்ணத்தில் (வெள்ளை நிறத்தில்) அருள்பாலிப்பது சிறப்பு. அம்பாளின் கையில் பாசம், அங்குசம், சர்ப்பம், கற்பகக் கள்பம் என பல ஆயுதங்களுடன் தரிசனமளிக்கிறார்.


ஆலய சிறப்புகள்


  • காமாட்சி அம்மன் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


  • இங்கு முக்கானங்களில் மூன்று சன்னதிகள் – காமாட்சி அம்மன், துர்கை, பங்குனி உத்திர திருவிழாவிற்கான உற்சவ மூர்த்தி ஆகியவை உள்ளன.

ஆடி வெள்ளி அம்மன் அலங்காரம் படம்


  • சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.


  • மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் பெரும் சிறப்புடையவை.


பக்தர்கள் அனுபவம்


காமாட்சி அம்மனை வணங்கினால்,


  • அறிவு வளர்ச்சி,


  • வளமும் ஆரோக்கியமும்,


  • குடும்ப நலனும்,


  • திருமண யோகமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


பல பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் காமாட்சி அம்மன் அருளால் நீங்கியுள்ளதை அனுபவமாக கூறுகின்றனர்.


காமாட்சி அம்மன் கோவில், ஆன்மிகத் தலம் மட்டுமல்ல; அது பக்தர்களின் மனதிற்கு வலிமை அளிக்கும் தெய்வீக சக்தி மையமாக விளங்குகிறது. காஞ்சிபுரம் சென்றவர்கள், நிச்சயம் காமாட்சி அம்மனை தரிசித்து, அன்னையின் அருள் பெற்றிட வேண்டும்.

Pudhukottai bhuvanaeshwari song lyrics | புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் பாடல் வரிகள் | Rajakali Amman Movie

Pudhukottai bhuvanaeshwari Bhuvanaeshwaram jagatheeshwari Mannadiyin malleeshwari Nanga nalloor rajeshwari Paagaeshwari yogeshwari logaeshwa...